7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வியாழன், 29 மார்ச், 2018

ஆனந்த சுதாகரன் மிக விரைவில் விடுதலை ;

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையினை பல்வேறு தரப்பினரும் கோரி வந்தனர்.
ஆனந்தசுதாகரனின் விடுதலைக்காக வடக்கு கிழக்கு பகுதிகளில் நடாத்தப்பட்ட கையெழுத்து பிரதிகளுடன் மகஜர் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்குவதற்காக ஆனந்த சுதாகரின் பிள்ளைகளும், உறவினர்களும் இன்று சென்றிருந்தனர்.
இந்த நிலையில் காலை 9 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கையெழுத்துப் பிரதிகளை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்கு தாமதமாகியமையினால் காலை 10 மணி வரை ஜனாதிபதி காத்திருந்து சந்தித்துள்ளார்.
மேலும் மிகவிரைவில் ஆனந்த சுதாகரன் விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்