7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வியாழன், 29 மார்ச், 2018

எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காததால் மாணவி தற்கொலை

மாணவி ஒருவர் இன்று (29) காலை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியது.

இந்த நிலையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த மாணவி இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்து அம்மம்மாவுடன் வசித்து வந்துள்ளார்.

எதிர்பார்ப்புடன் கல்வி கற்று பரீட்சை எழுதிய போதும் 4 பாடங்களில் மாத்திரமே சித்தியடைந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துள்ளார்.

முல்லைத்தீவு வள்ளிபுனம் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று பரீட்சை எழுதிய கைவேலி மருதமடு குழ வீதியை சேர்ந்த சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவியே இவ்வாறு தனது உயிரை மாய்த்துள்ளார்

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்