7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

சனி, 24 மார்ச், 2018

உழவு இயந்திரம் குடைசாய்ந்து விபத்து ஒருவர் பலி

காரைதீவில் இன்று காலை உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் விஸ்வலிங்கம் யோகேஸ்வரன் எனும் 51 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக உயிரிழந்த நபரின் சகோதரன் கூறுகையில்,
காரைதீவு வடிவேல் வீதியில் வசித்து வரும் தம்பியிடம் எருமை மாடுகள் காணப்படுகின்றன நிலையில் அவற்றிட்கு வைக்கோல் ஏற்றுவதற்கே வீட்டில் இருந்து காலையில் புறப்பட்டார்.
இந்த நிலையில் அட்டப்பள்ளம் பெரிய பால வீதிக்கு அண்மையில் உள்ள கோழியன்காட்டு வட்டைக்குச் செல்லும் வீதியில் உள்ள மதிலில் மோதிய பின்னர் மதகு ஒன்றின் கீழே உழவு இயந்திரம் தலைகீழாக குடைசாய்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்