7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

சனி, 17 மார்ச், 2018

யாழ்- பருத்தித்துறை வீதியில் கோர விபத்து!! இரு இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் சிறுப்பிட்டி வளைவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் வியாழக்கிழமை(15) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் அச்சுவேலி பத்தமேனி பகுதியினை சேர்ந்த 35 வயதுடைய கிட்னன் பரராஜசிங்கம் மற்று் 35 வயதுடைய நவரட்ணம் ஜெயந்தன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த பராஜசிங்கத்தின் மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக ஒருவகை நச்சுவிதையினை உட்கொண்டுள்ளார். மனைவியினை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு, அச்சுவேலி வைத்தியசாலையின் அம்புலன்ஸ்ஸில்அனுப்பி வைத்துள்ளார்.அம்புலன்ஸ் வண்டியினை பின் தொடர்ந்து சென்ற போது யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற மண் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த மோதுண்டுள்ளது.
சம்பவ இடத்தில் மனைவியினை பார்க்க சென்ற கணவனான பராஜசிங்கம் டிப்பர் சில்லினுள் தலை நசியுண்டு உயிரிழந்துள்ளார்.மற்றைய நபர் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை மற்றும் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையினை அச்சுவேலி போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்