7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

செவ்வாய், 26 மார்ச், 2019

அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்ட கப்பல்! சிக்கி தவிக்கும் இலங்கையர்கள்

இலங்கைப் பணியாளர்களை உள்ளடக்கிய கப்பல் ஒன்று அவுஸ்திரேலியாவின் கெம்லா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கப்பல் தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
ஜேர்மன் நாட்டு கப்பல் ஒன்றே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மற்றும் பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 கப்பல் பணியாளர்கள் அதில் தங்கியுள்ளனர்.
அவர்களுக்கான போதிய உணவுப் பொருட்களும் கப்பலில் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
கெம்லா துறைமுக நகரில் நிலவுகின்ற நிலக்கரி தொழிற்சங்க குழப்ப நிலைமை காரணமாக, இந்த கப்பல் 3 மாதங்களாக ஸ்தம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த குறித்த கப்பல் லைபேரியாவில் பதிவைக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்