யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படுகின்ற நஷ்டஈட்டுத் தொகையை முன்னாள் போராளிகளுக்கும் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்றைய தினம் பிற்பகல் 1 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் போராளிகள் முகங்கொடுத்து வருகின்ற பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளில் தொடர்பில் விளக்கமளித்தார்.
இதன்போதே, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நட்டஈட்டைப் போன்று, அவர்களுக்கும் நட்டஈடு வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தார்.
முன்னாள் போராளிகளுக்கான நஷ்டஈட்டை வழங்குவதற்காக 2016 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்தை அரசாங்கம் நிராகரித்திருப்பதால் தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்று மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது