7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

ஞாயிறு, 18 மார்ச், 2018

கொல்லப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேச செயலகத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள புலிபாய்ந்தகல் ஆற்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் காணப்படுவதாக
வாழைச்சேனைப்
பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிரான் பிரதேச செயலகத்திற்கு மிகவும் அண்மித்த மதகு மற்றும் வாகை மரங்கள் அடர்ந்த புதர்
பகுதியில் யுவதியின் சடலம் கிடப்பது பற்றி பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பெண் வவுனியா - கணேசபுரத்தை சேர்ந்த 33 வயதான எஸ். சுதர்சினி என
அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி மத்திய கிழக்கு நாடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் பார்த்து விட்டுத்
திரும்பியிருக்கலாம் எனவும், சடலத்தின் அருகே வெளிநாட்டில் இருந்துகொண்டு வந்த பொருட்கள்
சில காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கவுள்ளதாகவும், மோப்ப நாயின்
உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்