7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

ஆணாக நடித்து இளம் பெண்ணை திருமணம் செய்த பெண் கைது

திருகோணமலையில் ஆணாக நடித்து மற்றொரு ணை ஏமாற்றிய பெண்ணும் அவருக்கு உதவிய இருவரும் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த ஆணாக நடித்த பெண் மூதூர் ஶ்ரீ நாராயணபுரம் பகுதியில் உள்ள இளம் பெண்ணொருவரை 25.04.2018 அன்று திருமணம் செய்துள்ளார்.

திருமணம் நடைபெற்று இரண்டு நாட்களின் பின்னர் தனது கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மணப்பெண் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் அவரிடம் சோதனை செய்த போது அவர் பெண் என்பதும் ஆணாக சித்தரித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.தனது சகோதரனின் சாயலை ஒத்துள்ள குறித்த பெண் அவரின் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை ஆதாரமாகக் கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த பெண் கைது  செய்யப்பட்டுள்ளார்.  பெண்களைக் கடத்தும் நோக்கில் இந்த மோசடி நடந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த மோசடிக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பெண்ணையும் லொறி சாரதி ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்