2005ஆம் ஆண்டு எனக்கு கிடைத்த நண்பர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. எமது மக்கள் அதிகமாகவே இழந்துள்ளார்கள். இதற்குமேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எமது மக்கள் இழந்த எதையும் எங்களால் திருப்பித்தர முடியாது. இவ்வாறு தென்னிந்தியாவின் பாடகி கல்பனா தெரிவித்தார்.
கல்பனா உள்ளிட்ட பாடகர் குழுவினர் வவுனியாவில் இடம்பெறவுள்ள இசை நிகழ்வு ஒன்றுக்காகத் தமி்ழ் நாட்டில் இருந்து வவுனியாவுக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்துக்களைத் தெரிவித்தனர். இதன் போதே பாடகி கல்பனா இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது; எனது முதல் இசை நிகழ்வு இலங்கையில் ஆரம்பமானது. அதேபோல் அதிகமான இசை நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளதும் இலங்கையில் தான். சென்னையிலிருந்தும் அதிகமான தாயகப்பாடல்கள் பாடியிருக்கின்றேன். அதே நேரம் தாயகத்துக்கும் வந்து பாடியிருக்கின்றேன். கடந்த 2005ஆம் ஆண்டு தாயகப்பாடல்கள் ஒலிப்பதிவு செய்துகொள்வதற்காகக் கிளிநொச்சிக்கு எனது தாயாருடன் சென்றிருந்தேன்.
இதனால் எனக்கு இலங்கையில் பல நண்பர்கள் இருந்தார்கள். இன்று பலர் உயிருடன் இல்லை. சிலபேர் வேறு நாட்டில் இருக்கின்றார்கள். அந்த நினைவுகள் எனக்கு ஞாபகம் வருகின்றன. மாவீரர் துயிலும் இல்லத்துக்குச் சென்றபோது நான் அழுததைவிட எனது தாயார் அங்கு அதிகமாகக் கதறி அழுதிருந்தார். அடிப்படையில் உலகத்தில் எவ்வளவு மக்கள் எவ்வாறான கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
அதிலே முக்கியமாக நமது மக்கள் அதிகமாகவே இழந்துள்ளார்கள். இதற்குமேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எமது மக்கள் இழந்த எதையும் எங்களால் திருப்பித்தரமுடியாது. ஆனால் ஒரு நான்கு மணிநேரம் கஷ்டங்கள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் மறந்து நல்ல இசையைக்கேட்டுக் கொள்வதற்கு ஒரு சந்தோசத்தைக் கொடுக்க முடியும். அதை நாங்கள் பெருமையாகவே நினைத்துக்கொள்கின்றோம்.
வடக்கில் உள்ள இசைக் கலைஞர்களின் திறமைக ளுக்குக் குறைவு என்பது இல்லை. அது எவராக இருந்தாலும் அவர்களுக்குத் திறமை என்பது நிறையவே காணப்படுகின்றது. அவர்களுக்குப் பயிற்சி மட்டும் கிடைக்குமாக இருந்தால் அவர்கள் வேறு நிலைக் குச் சென்றுவிடுவார்கள். இது நான் இங்கு வந்து பார்த்த உண்மை. பயற்சி என்பது ஒரு கலைக்கு அல்லது எந்த ஒரு வேலைக்கும் சரி மிகவும் முக்கிய மானது.
அந்தப்பயிற்சி கிடைக்காத போதும் இங்குள்ள கலைஞர்கள் இவ்வளவு தூரம் செய்கின்றார்கள் என்றால் முறையான பயிற்சி கிடைத்தால் வேறு ஒரு நிலையில் இருப்பார்கள் என்பது மாற்றம் இல்லாத உறுதியான எனது கருத்து. இசையில் ஆர்வம் உள்ளவர்கள் விருப்பம் உள்ளவர்கள் முன்வரவேண்டும். எனக்கு இங்கு இருப்பவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கவேண்டும் என்ற விருப்பம் வந்துள்ளது. கடவுளின் சித்தமாக இருந்தால் எதிர்காலத்தில் பார்க்கலாம்– என்றார்.