7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 23 ஏப்ரல், 2018

முல்லைத்தீவில் நடக்கும் அதிசய சம்பவம்!

முல்லைத்தீவு நகரில் விசித்திரம் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குட்டிகளை ஈன்றுள்ள நாய் ஒன்றிடம் தினமும் பூனையொன்று பால் குடித்து வரும் விசித்திர சம்பவம் பதிவாகியுள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
நாய் தனது குட்டிகளுக்கு பாலுட்டிய பின்னர், அருகில் இருக்கும் பூனைக்கும் பால் கொடுப்பதாகவும் முல்லைத்தீவு நகர மக்கள் கூறுகின்றனர்.
 
நாய் குட்டிகளை ஈன்ற பின்னர், அருகில் இருக்கும் பூனை நாய் நட்பாக இருந்து வருகின்றது., பூனை, நாய் குட்டிகளுக்கு எந்த தொந்தரவையும் கொடுப்பதில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
மனிதர்களுக்கு இடையில், மனிதாபிமானம், அன்பு, பாசம் என்பன குறைந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் எதிரான குணங்களை கொண்ட உயிரினங்கள் ஒற்றுமையாக இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்