ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ தளபதியின் படங்களுடன் வலி.வடக்கில் ஒருவர் காவடி எடுத்துள்ளார்.
இவரது செயல் அங்குள்ள இனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வலி.வடக்கை சேர்ந்த ஒருவரே இந்த செயலை செய்துள்ளார்.
குறித்த இளைஞர் தமது உடலில் கட்டி கொண்டு காவடி எடுத்துள்ளார்.
கடந்த 27 வருடங்களாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலி.வடக்கில் ஒரு பகுதியான 683 ஏக்கர் நிலரப்பரப்பு இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கவினால் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வினை தொடர்ந்து ,ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ தளபதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குறித்த பகுதியை சேரந்த ஒருவர் காவடி எடுத்துள்ளார்.


