கனடா - டொரெண்டோ பகுதியில் TTC பஸ்ஸில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் 47 வயதான தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் பஸ்ஸில் பயணித்த 15 வயது சிறுமிக்கு பின்னால் நின்ற குறித்த நபர் அவரிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுப்பட்டதாகவும் அதற்கு அடுத்த நாள் மாலையிலும் மேலும் 3 இளம் பெண்களிடம் அதே முறையில் பாலியல் சேட்டையில் ஈடுப்பட்டுள்ளார்.
இச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய மறு நாள் காலை முதல் மாலை வரை பொலிஸார் காத்திருந்து குறித்த நபரை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த 4 குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் 47 வயதான கேதிஸ்வரன் ஷண்முகநாதன் என்ற தமிழரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

