தமிழகத்திலிருந்து படகு வழியாக யாழ்ப்பாணம் சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள் உட்பட 14 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று (05.05.2018) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசந்துறை அருகே பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து சென்ற பொழுது சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுக் கொண்டிருந்த இப்படகை சோதனையிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, முறையான பதிவுகளின்றி வந்த அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில் காங்கேசந்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட 3 பெண்கள், 4 குழந்தைகள், 5 ஆண்கள் உள்ளிட்ட 12 அகதிகளும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 1983-ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக தமிழகத்திற்கு புலம்பெயரத் தொடங்கிய தமிழ் அகதிகள், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாகவும் பெருமளவில் புலம்பெயர்ந்தனர். அப்போர் சூழல் காரணமாக ராமேஸ்வரம்- தலைமன்னாரிடையே இருந்த படகுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
இன்றைய நிலையில், தமிழகம் எங்கும் உள்ள 107 முகாம்களில் 62,629 அகதிகளும், முகாம்களுக்கு வெளியே 36,794 அகதிகளும் வசித்து வருகின்றனர்.
2011 முதல் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின்(UNHCR) உதவியுடன் 5000த்திற்கும் மேற்பட்ட அகதிகள் தமிழக அகதி முகாம்களிலிருந்து இலங்கைக்கு திரும்பி இருக்கின்றனர். கடந்த ஆண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பில், தமிழக முகாம்களிலிருந்து இலங்கைக்கு திரும்ப விரும்பும் அகதிகள் பலர் தங்கள் உடைமைகளை கொண்டுச் செல்ல கப்பல் போக்குவரத்தை எதிர்பார்ப்பதாக தமிழக அரசின அகதிகள் மறுவாழ்வு மற்றும் நல்வாழ்வுத்துறையின் ஆணையர் உமாநாத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான சூழலில், தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள அகதிகள் ஆஸ்திரேலியா செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள 14 பேரையும் 19.05.2018 வரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.