தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களின் ஒலிகளுக்கு மத்தியில், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் மே தினப் பேரணி யாழில் இடம்பெற்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நெல்லியடி புதிய சந்தைப் பகு தியில் ஆரம்பமான இப்பேரணி, மைக்கல் விளையாட்டு மைதானம் வரை சென்றடைந்தது.
இதன்போது, தமிழரின் உரி மைகள், தமிழ் மக்களின் கோரிக் கைகள் மற்றும் தொழிலாளர் உரி மைகள் தொடர்பில் வாகன ஊர்தி களும் பேரணியில் பங்கேற்றன.
குறித்த பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு ப்பினரான சுமந்திரன், யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் ஆர்னோல்ட், மாகாண சபை உறுப்பினர்கள், நகர மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், உள்ளூ ராட்சி மன்ற ங்களின் உறுப்பினர்கள், பங்காளிக் கட்சி களின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்க ளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என பெரும் திரளானோர் பேரணியில் பங்கேற்றனர்.

