யாழ். உடுவில் பகுதியில் வாள்களுடன் நடமாடிய சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த மேலும் இரு இளைஞர்களை சுன்னாகம் பொலிஸார் கைது
செய்துள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்தார்
யாழ். உடுவில் பகுதியில் வாள்களுடன் நடமாடிய சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த மேலும் இரு இளைஞர்களை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் யாழ். உடுவில் பகுதியில் வாள்களுடன் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம்(08) சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த 24, 26 வயதான இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தச் சுன்னாகம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.