7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வியாழன், 21 ஜூன், 2018

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் 14 பேருக்கு தடை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 ஈழத் தமிழர்களின் பெயர் பட்டியலை சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தடைப் பட்டியலில் இடம்பெறும் 86 தனிநபர்கள் பட்டியலுடன் இந்த 14 ஈழத் தமிழர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஐக்கிய நாடுகள் ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 47ஆம் பிரிவின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC),  தமிழர் புனர்வாழ்வுக் கழகம் TRO) உள்பட 8 அமைப்புகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என்று குறிப்பிடப்படும் புலம்பெயர் நாடுகளில் வாழும் 86 தனி நபர்கள் இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே புலம்பெயர் நாடுகளில் வாழும் 100 பேர் இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்