7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

ஞாயிறு, 3 ஜூன், 2018

வயோதிப தம்பதியரை தாக்கி 8 பவுண் நகை கொள்ளை

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை புகுந்த கொள்ளைக் கும்பல், அங்கு வாழ்ந்த வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு 8 பவுண் தங்க நகை கள் உட்பட பெறுமதியான பொரு ள்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் மானிப்பாய் ஆனந்தா வீதியில் இடம்பெற்றது.
கொள்ளையர்களின் தாக்குதலில் தலை யில் படுகாயமடைந்த குருநாதர் இரட்ணம் (வயது69) என்ற வயோதிபப் பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர் ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், தடயவியல் பொலிஸாருடன் விசாரணை களை முன்னெடுத்திருந்தனர்.
ஆரம்ப விசாரணையில் 8 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டதாக தெரியவ ந்திருந்ததுடன் மேலதிக விசாரணைகளின் பின்னரே கொள்ளையிடப்பட்ட பொருள்கள் தொடர்பில் சரியான தகவலை வழங்க முடி யும் என்றும் பொலிஸார் கூறினர்.          

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்