7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வெள்ளி, 8 ஜூன், 2018

மீண்டும் குழாய் இரைச்சலால் அதிரும் யாழ் சங்கானை

கடந்த சில தினங்களுக்குமுன்னர் சங்கானை மாவடி ஞானவைரவர் ஆலய குழாய் தொல்லைதொடர்பில் அக்கிராமத்தில் பொலிஸ் நடமாடும்சேவை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே செய்திவெளியிட்டிருந்தோம். அம்மக்களுக்கு தீர்வு கிடைத்திருந்தது. இப்போது சிலநாட்களாக சங்கானை மாளியாவத்தை வைரவர்கோவில் வீதிகள் சந்திகளில் குளாய்கள் கட்டி இரைவதால் அப்பகுதி மக்கள் பெரிதும்பாதிக்கப்பட்டிருப்பதாக எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் நாகரிகமான பல திருவிழா உபயகாரர்கள் நாகரிகமானமுறையில் ஆலயவளாகத்திற்குள்மட்டும் மட்டுப்படுத்தி பயன்படுத்துகின்றபோதும் படிப்பறிவில்லாத வெளிநாட்டிலிருந்துவரும் காசினைவைத்து பந்தாகாட்டுகின்ற சில திருவிழாக்கார காவாலிகளால்தான் இவ்வாறாக துன்பம் பொதுமக்களுக்கு விளைவிக்கப்படுகின்றது.இதனால் முழு கிராமத்தினதும் பெயர் கெட்டுப்போவதாக மக்கள்தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இவ்வாலயத்திற்கு மிக அருகிலிருக்கும் நிச்சாமம் ஞானவைரவர் கோவிலிலும் அதிக இரைச்சலுடன் குழாய்களும் பாரிய ஒலிப்பெடடிகளும் இரைவதால் மக்கள்பெரும் பாதிப்பிற்குள்ளாகிவருகின்றனர்.

இரு ஆலயங்களிலும் போட்டிக்கு குளாய் இரைவதால் சூழவுள்ள மாணவர்களும் இதயநோயாளிகளும் வயதானவர்களும் பெரும் பாதிப்புக்குள;ளாகிவருகின்றனர். அதுமட்டுனின்றி ஆலயத்தில் றீமிக்ஸ் செய்யப்பட்ட குத்துப்பாட்டுக்களை போட்டு சைவத்தையே கேலிக்கூத்தாக்கியயும் நகைப்பிற்கும் உள்ளாக்கிவருகிறார்கள்.

இதனை சமயத்தில் அக்கறைகொண்டவர்களாக தம்மை தம்பட்டமடிக்கும் எவரும் கண்டிக்கமுன்வரவில்லை. முன்னர் இவ்வாறான செயல்களில் ஈடுபட்ட பலர் ஊடககச்செய்திகளின்பின் சமூக அக்கறைகருதி மாறியுள்ளபோதும். வெளியுலக நாகரிகம் தெரியாத கல்வியறிவு குறைந்த சிலரே மக்களை துன்பப்படுத்துகின்றனர்.

யாழ் மேல்நீதிமன்றம் பொதுமக்களை பாதுகாக்கும்நோக்கில் ஆலயவளவிற்குள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தான் ஒலிபெருக்கி பயன்படுத்தவேண்டும் என இரண்டுமுறை உத்தரவிட்டிருந்தது.. வடக்கு முதல்வர் சி.வி விக்னேஸ்வரனும் கடந்த 15-3 பொலிஸ் உயரதிகாரிகளுடனான சந்திப்பில் இது தொடர்பில் தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்துவருகிறது குற்றவியல் பிரிவு (பீனல்ட் கோட்) 98 பிரிவில் நடவடிக்கையெடுத்து இவர்களை கைதுசெய்யமுடியும் என சுட்டிக்காடடியிருந்தார்.

இவ்வாறான உயர் அழுத்தங்கள் இருந்தும் இம்மக்கள் விரோத செயல்களை பின்னணியிலிருந்து இயக்குபவர்கள் யார் என வடமாகாண சபையும் நீதிமன்றங்களும் கண்டறிந்து சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும் என பொதுமக்கள் கோருகினறனர் நடவடிக்கை எடுப்பார்களா!!!

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்