7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

ஞாயிறு, 1 ஜூலை, 2018

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மனுக்கு வந்த சோதனை:

வடதமிழீழம், ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தமிழீழ வரைபடத்துடன் நேற்றைய தினம் அம்பாள் உலா வந்தமை தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்றைய தினம் ஆலயத்துக்கு சென்ற 10 இற்கும் மேற்பட்ட புலனாய்வு பிரிவினர் ஆலய நிர்வாகம் மற்றும் இளைஞர் மன்றத்தினரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தேர்த்திருவிழா நடைபெற்று நேற்றய தினம் பூங்காவன திருவிழா நடைபெற்றது. இதன்போது ஆலயத்தின் இந்து இளைஞர் மகளிர் மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த பூங்காவன திருவிழா நடைபெற்றது.

இதன்போது மேற்படி திருவிழாவின் வெளி வீதியில் அம்பாள் ஊர்வலம் வந்த போது தமிழீழ வரைபடத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வலம் வந்தார். இந்த படம் சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து அனைவராலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் மேற்படி ஆலயத்துக்கு சென்ற காங்கேசன்துறை, மானிப்பாய், யாழ்ப்பாணம், கோப்பாய் காவல்துறை நிலைய புலனாய்வு பிரிவினர்  விசாரணை செய்துள்ளனர். இது தவிர இராணுவ புலனாய்வு பிரிவினரும் அங்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வழிபாட்டு ரீதியாக முன்னெடுக்கப்பட்ட ஒரு நிகழ்வுக்கு இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படுத்துவது குறித்து பலரிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்