7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

மட்டக்களப்பு கடலில் கானமல் போன 3 பிள்ளைகளின் தந்தை!

மட்டக்களப்பு சவுக்கடி கடலில் மீனவர் ஒருவர் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சலுக்கடி கடலில் மீனவர் ஒருவர் மீன்பிடி படகினை கடலுக்குள் தள்ளமுற்பட்டபோது கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலையில் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
தன்ணாமுனையைச் சேர்ந்த 35 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான நடேசன் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்
குறித்த மீனவர் வழமைபோல நேற்று இரவு கடலுக்குச் சென்று மீன்பித்து கரைக்குவந்துள்ள நிலையில் சம்பவதினமான இன்று காலை 7.00 மணிக்கு மீண்டும் கடலில் மீன்பிடிப்பதற்காக கரையில் இருந்த படகினை கடலுக்குள் தள்ளிச் சென்ற நிலையில் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக மீனவர்கள் படகுகளில் இவரை கடலில் தேடுதலில் ஈடுபட்டபோதும் மீனவரை காணவில்லை .
இது தொடர்பான விசாரணைகளை எறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்