7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

பெற்ற பிள்ளைகள் வெளிநாட்டில்! யாழில் தனிமையில் தவிக்கும் வயோதிப தந்தை

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் யாருமற்ற நிலையில் வயோதிப தந்தை ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
பெற்றபிள்ளைகள் அமெரிக்காவில் வசிப்பதால் தந்தை யாருமற்ற நிலையில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
குறித்த தந்தை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 9ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
 
அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் பிள்ளைகள் இருந்தும் மூன்று மாதமாக அவரை பார்ப்பதற்கு ஒருவரும் வருகைத்தரவில்லை என தெரியவந்துள்ளது.
 
இந்த தந்தையின் பரிதாப நிலையை கண்டு மருத்துவர்கள் மற்றும் தாதி உத்தியோகத்தர்கள் பலர் இவருக்கு பல உதவிகள் செய்து வருகின்றனர்.
 

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்