யாழ் இளவாலை கவுணாவத்தை ஆலயத்துக்கு அருகிலுள்ள வீட்டில் ஆறுபேர் கொண்ட கும்பல் முகத்தை மூடிக் கட்டியவாறு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
அத்தோடு வீட்டிலிருந்து உந்துருளியையும் களவாடிச் சென்ற சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
வாள் மற்றும் கொட்டன்களுடன் மூன்று உந்துருளிகளில் 6பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.
அந்தச் சமயத்தில் வீட்டில் 3பேர் இருந்ததாகவும் அவர்கள் அச்சத்தால் வெளியில் வரவில்லை எனக் கூறப்படும் அதேவேளை வீட்டுக் கண்ணாடிகளை உடைத்து, பொருள்களைச் சேதப்படுத்தி அட்டகாசம் புரிந்த கும்பல் வீட்டிலிருந்த உந்துருளிளையும் எடுத்துச் சென்றுள்ளது.
மேலும் வீதியில் செல்லும் போது பொதுமகன் ஒருவனுக்கு வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். கா
யமடைந்த இளைஞன், தெல்லிப்பழை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

