7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

யாழில் சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி

யாழ்.பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயது பாடசாலை சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சிறுமியின் சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளதாக .  தெரிவிக்க்கபடுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சிறுமிக்கு வயிற்றுக் குத்து எனத் தெரிவித்து கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் மேற்படி சிறுமி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வைத்தியர்கள் சிறுமிக்கு மேற்கொண்ட வைத்தியப் பரிசோதனைகளின் போது அவர் கர்ப்பமாகவிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில் வைத்தியர்களால் காங்கேசன்துறை பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து காங்கேசன்துறைப் பொலிஸார் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்ட துரித விசாரணைகளையடுத்து சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவரெனச் சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கைதான நபர் மேற்படி சிறுமியின் சித்தப்பா முறையானவரெனவும், சிறுமியின் தாயை இரண்டாம் தாரமாக மணந்து கொண்ட நபரெனவும் தெரியவருகிறது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்