நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பல்பொருள் அங்காடி ஒன்றில் சாண்ட்விச் திருடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து பதவி விலகியுள்ளார்.
இச்சம்பவம் ஸ்லோவேனியா நாட்டில் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்லோவேனியாவின் லியூப்லியானா என்ற பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு சாண்ட்விச் வாங்க சென்றதாகவும், அங்கிருந்த ஊழியர்கள் தன்னை கண்டுகொள்ளாததால் ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்துள்ளார்.
பின்பு அந்த கடையின் பாதுகாப்பை பரிசோதனை செய்யும் விதமாக அங்கிருந்து சாண்ட்விச்சை எடுத்துக்கொண்டு சென்றதாக உள்ளூர் ஊடகங்களிடம் தர்ஜ் கிரஜ்க்சிச் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
நான் குறைந்தது மூன்று நிமிடங்களாவது பணம் செலுத்துவதற்காக பொறுத்திருந்திருக்க வேண்டும்” என்று குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
மேலும் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரியதுடன் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.
இவருக்கு 54 வயதாகின்றமை குறிப்பிடத்தக்கது.

