7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

சனி, 16 பிப்ரவரி, 2019

யாழில் வேருடன் சாய்க்கப்பட்ட பழைமை வாய்ந்த மரம்

யாழ்ப்பாணம் கொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட பழைமை வாய்ந்த அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.

கடைப் பகுதிகளை அண்டிய நகரப் பகுதியில்
காணப்பட்ட அரசமரத்தை, நீர்க்குழாய் பொருத்தும் நிறுவனத்தினர் வேருடன் தறித்துள்ளனர்.

வெயிலில் வருவோர் களைப்பாறிச் செல்லும் இயற்கையான நிழற் குடையாக இந்த அரசமரம் காணப்பட்டது.

சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் காணப்பட்ட அரசமரத்தை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் ஏ9 முதன்மைச் சாலை தார்க் கலவையாக மாற்றும் போது கூட மரத்தை விடுவித்திருந்தனர்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்