7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வெள்ளி, 22 மார்ச், 2019

வவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்

ஆறு மாதம் சிறைத்தண்டனை வழங்கியமைக்காக தனது கழுத்தை அறுத்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வவுனியா நீதிமன்றில் நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 
 
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், 
 
வவுனியா நீதிமன்றிற்கு வழக்கு நடவடிக்கைகளிற்காக சென்றநபர் ஒருவர் நேற்றையதினம் நீதி மன்றின் நடவடிக்கைக்கு குழப்பத்தை விளைவித்தார் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் அவருக்கு  ஆறுமாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்பளிக்கபட்டுள்ளது.
 
இதன் நிமித்தம் பொலிசாரால் அவர் நீதிமன்ற கூண்டுக்குள் அடைக்கபட்டார். 
 
இதன்போது  தனது பையில் வைத்திருந்த சிறிய பிளேடால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். 
 
காயமடைந்தவரை மீட்ட பொலிஸார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்