7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வியாழன், 28 மார்ச், 2019

லண்டனில், இலங்கை தமிழர் கொலை சந்தேக நபர் கைது

லண்டனில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட 54 வயதுடைய ரவி கதிர்காமர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் பிரித்தானியாவின் பினர் நகரில் சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்தி சென்றார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை காலை 6.30 அளவில் வர்த்தக நிலையத்தினை திறப்பதற்கு வருகை தந்த போது இனந்தெரியாத நபர்களால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரவி கதிர்காமர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக என அந்நாட்டு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பொது மக்கள் தகவல் அறியும் பட்சத்தில் பொலிஸாருக்கு தந்துதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் ரவி கதிர்காமர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் குறித்த பகுதியில் நடமாடியமைக்கான காணொளியையும் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் வௌியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்