7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

இலங்கையில் அரசியல் கைதிகளே இல்லை: அரசாங்கம்

இலங்கையில் அரசியல் கைதிகள் எவருமில்லை.விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் சிலர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என இலங்கையின் நீதிஅமைச்சர் தலதா அத்துகோரள மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று(01) வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து விட்ட தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் அடிப்படையில் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டுமெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றும் போதே நீதிஅமைச்சர் தலதா அத்துகோரள மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
54 சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் வழக்குகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
மூன்று சந்தேக நபர்கள் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.ஆறு சந்தேக நபர்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே,வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்