7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வெள்ளி, 5 ஏப்ரல், 2019

யாழ். மருதனார்மடத்தில் நாளை உண்ணாவிரதம்

இலங்கையில் அண்மைக்காலமாக இந்துசமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் தொடர் வன்முறைகளைக் கண்டித்து நாளை சனிக்கிழமை (06) காலை-08 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கேதீச்சர ஆலயத்தின் வளைவு அண்மையில் உடைத்தெறியப்பட்டமை.இதனைத் தொடர்ந்து மன்னார் நானாட்டான் காளி கோயில் சிலையுடைக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களுடன் இந்துத் தமிழின அழிப்புக்காக நன்கு திட்டமிடப்பட்ட பாரிய மத மாற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேற்கண்டவாறான செயற்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்தும்,இவ்வாறான சம்பவங்கள் தொடராதிருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியுமே நாளைய தினம் மருதனார்மடத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் உணர்வுள்ள அனைத்து இந்து மக்களையும்,இந்து அமைப்பின் உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்