யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் எதிர்வரும்-12 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை(07) பத்தாவது தடவையாக மாபெரும் குருதிக் கொடை முகாம் நடாத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லூரியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் குருதிக் கொடை முகாம் காலை-09.30 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரை நடைபெற்றது. இந்தக் குருதிக் கொடை முகாமில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினரும் இணைந்து நேரடியாகச் சென்று குருதி பெற்றுக் கொண்டனர்.
இந்தக் குருதிக் கொடை முகாமில் 102 வரையான தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் தாதியப் பயிற்சி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிதானம் செய்ததாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகா
இவ்வாறு குருதிதானம் செய்தவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தாமாக முன்வந்து குருதி தானம் வழங்கிய பெண் தாதியர்கள் மற்றும் தாதியப் பயிற்சி மாணவர்களாகவுள்ளமை விசேட அம்சமாகும். இதன் மூலம் குடும்பம் மற்றும் பல்வேறு காரணங்களால் குருதிக் கொடை வழங்க முன்வராத ஏனைய பெண்களுக்கு மேற்படி பெண்கள் முன்னுதாரணமாக மாறிப் பெருமை சேர்த்துள்ளனர்.
யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லூரியின் பதில் அதிபரான சாந்தி இராஜகுலசேகரன் மேற்படி குருதிக் கொடை முகாம் தொடர்பாக எமது செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையில்,
தாதியர் தினத்தை முன்னிட்டு நாம் பத்தாவது வருடமாக இவ்வாறான மாபெரும் குருதிக் கொடை முகாமை ஏற்பாடு செய்து நடாத்துகின்றோம். தாதியர்களான எங்களால் எமது மக்களுக்கும், சமூகத்திற்கும் செய்யக் கூடிய மிகப் பெரிய உதவியாக இந்தக் குருதிக் கொடை நிகழ்வைக் கருதுகின்றோம்.
அந்த வகையில் எமது மாணவர்களும், தாதியர்களும் இணைந்து குருதிக் கொடை முகாமை ஏற்பாடு செய்து நடாத்துகிறார்கள். இந்தக் குருதிக் கொடை முகாமில் பங்குபற்றிய அனைத்துத் தாதியர்களுக்கும், தாதிய மாணவர்களுக்கும் இறைவன் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும். ரி வைத்தியகலாநிதி ம.பிரதீபன் தெரிவித்தார்.
இன்றைய குருதிக் கொடை முகாமில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் சிறந்த தாதியர்களாக உருவாக வேண்டும் என்றார்.
பெரும் எண்ணிக்கையான பெண்கள் தாமாக முன்வந்து குருதிதானம் வழங்கியமை தொடர்பாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம.பிரதீபன் எமது செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லூரி தாதியர் தினத்தை முன்னிட்டு வருடாந்தம் நடாத்தி வரும் குருதிக் கொடை முகாம் இந்த வருடமும் நூற்றிற்கும் மேற்பட்ட தாதிய உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதி தானம் வழங்கியுள்ளனர்.
சாதாரண மக்களில் பலரும் குருதிதானம் வழங்குவதால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படுமென நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வைத்தியசாலைகளுடன் தொடர்புடையவர்கள் குருதிக் கொடை வழங்கும் போது ஏனையவர்களுக்கு அதுவொரு முன்னுதாரணாமாக அமைந்து விடுகின்றது.
பொதுவாக யாழ்.மாவட்டத்தில் குருதிக் கொடை வழங்குபவர்களில் ஆண்களின் எண்ணிக்கையே அதிகமாகவுள்ளன. ஆனால்,யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் தாதியர் தினத்தை முன்னிட்டு இம்முறை நடாத்தப்பட்ட குருதிக் கொடை முகாமில் மொத்தமாக 102 பேர் குருதி தானம் வழங்கியுள்ளனர். இதில், 80 வீதத்திற்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் பெண்களாகவும்,சிறுதொகையினர் மாத்திரமே ஆண்களாகவும் காணப்படுகின்றனர்.
எனவே, யாழ்ப்பாணத்துப் பெண்கள் மத்தியில் குருதி தானம் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். குருதிதானத்தின் தேவையறிந்து குருதிக் கொடை வழங்கிடப் பெண்கள் தாமாக முன்வர வேண்டும் என்றார்.
யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லூரியின் சிரேஷ்ட போதனாசிரியர் எஸ்.ஜெயக்குமார் குறித்த குருதிக் கொடை முகாம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,
பொதுவாகத் தங்களால் குருதிக் கொடை வழங்க முடியாதென்ற மனப்பாங்கு, அல்லது கருத்தியலைக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெறும் தாதிய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாகவே காணப்படுகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் நடைபெற்ற குருதிக் கொடை முகாமில் குருதிதானம் செய்தவர்களில் 80 வீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்களாகவே காணப்படுகின்றனர்.
இத்தகைய செயற்பாடானது எங்களுடைய சமூகத்திற்கு சிறந்ததொரு முன்னுதாரணமாக அமைய வேண்டுமென்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும்.
எங்களுடைய சமூகத்தின் மீது தாதியர்களுக்குள்ள அக்கறையை எடுத்துக் காட்டுவதாக இந்தக் குருதிக் கொடை முகாம் விளங்குகிறது.
ஆகவே, எங்களுடைய சமூகத்திலுள்ளவர்கள் அனைவரும் இதனையொரு முன்னுதாரணமாக கொண்டு குருதிதானம் வழங்க முன்வர வேண்டும்.
நாங்கள் தாதியர் தினத்தை முன்னிட்டுப் பத்தாவது தடவையாக இன்றைய குருதிக் கொடை முகாமை ஏற்பாடு செய்து நடாத்துகின்றோம். ஒவ்வொரு தடவையும் நூறு அல்லது நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் குருதிதானம் செய்வது வழமை.
ஆரம்ப காலங்களில் நாங்கள் வைத்தியசாலைகளில் இரத்த வங்கிகளுக்குச் சென்றே குருதி தானம் வழங்கி வந்தோம். ஆனால், கடந்த எட்டு வருடங்களாக எங்களுடைய தாதியர் பயிற்சிக் கல்லூரி மண்டபத்தில் குருதிக் கொடை முகாமை ஏற்பாடு செய்து நடாத்தி வருகிறோம் என்றார்.
யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லூரியின் மாணவியொருவர் மேற்படி குருதிக் கொடை முகாம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,
எதிர்வரும்- 12 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் தாதியர் வாரமாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தானங்களில் சிறந்த தானமாக இரத்ததானம் காணப்படுகிறது.தவிர தீமைகள் எதுவும் ஏற்படப் போவதில்லை. நாங்கள் வழங்கும் இரத்தத்தால் எத்தனையோ மனித உயிர்கள் காப்பாற்றப்படவுள்ளார்கள்.
சிலர் இரத்ததானம் வழங்குவதால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாமென அச்சப்படுகிறார்கள். ஆனால்,இரத்ததானம் வழங்குவதன் மூலமாக எங்களுக்கு நன்மைகள் மாத்திரமே கிடைக்கப் போகிறது.
எங்களுடைய இரத்தத்தை நோயாளர்களுக்கு வழங்கும் போது எங்களுடைய இரத்தத்தைப் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே வழங்குவார்கள். இதன் மூலம் எங்களைப் பீடித்துள்ள நோய்களைக் கண்டறியலாம் என்றார்.