7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 20 மே, 2019

ஈரான் என்ற நாடே இருக்காது: அமெரிக்க ஜனாதிபதி

ஈரான் நாடு போரிட விரும்பினால் அதுவே அந்த நாட்டின் முடிவாகவிருக்குமென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாகத் தனது டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ஈரான் போரிட விரும்பினால் அதுவே அந் நாட்டின் அதிகாரபூர்வமாக முடிவாகவிருக்கும் எனவும், எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அமெரிக்கா பயப்படாது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து தீவிவாதிகளுக்கு ஈரான் ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டி வந்த அமெரிக்கா தற்போது அந் நாட்டினை அச்சுறுத்த விமானம் தாங்கிக் கப்பல் குண்டு வீசும் விமானங்களையும் அனுப்பியுள்ளது.
இதேவேளை, பொதுவாகவே அமெரிக்கா தன்னை எதிர்க்கும் நாடுகளை மிரட்டுவது வழக்கம். வடகொரியா,சீனாவை அடுத்து தற்போது ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ட்ரம்பின் இந்த அதிரடி அரசியலை அமெரிக்காவிலேயே பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்