ஸ்ரீலங்கா பொலிஸார் ஏனைய பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்கும் செயற்றிட்டங்கள் பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்க கூடாது என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார்.
புதிததாக பதவியேற்றுள்ள வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜயகுணவர்தனவிடம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வட மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுணவர்தன ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (28) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக வட மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
குறிப்பாக வடமாகாணத்தில் இடம்பெறும் சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வடக்கில் யாழ் மாவட்டத்திலே அதிகளவிலான சமூக விரோத செயல்கள் காணப்படுவதாக வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸார் அதிபரிடம் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சட்டவிரோத மண்அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆளுநர், வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடமாகாணத்தில் முக்கியமாக மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதவாறு பொலிஸார் ஏனைய பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து ஆரோக்கியமான செயற்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்றும் ரவி விஜயகுணவர்தனவிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.