7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

சனி, 6 ஜூலை, 2019

இரத்தம் சிந்தியது போதும் ஒரே கூரையின் கீழ் வாழ்வோம் என்கிறார் சம்பிக்க

இன, மதம் என்பவற்றிற்காக இதுவரைக்காலமும் இரத்தம் சிந்தியது போதும் எதிர்காலங்களில் அனைவரும் ஒரே கூரையின்கீழ் ஒன்றிணைந்து வாழ்வோமென அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சம்பிக்க ரணவக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“நாம் அனைவரும் தனி தனியாக வாழவில்லை சமூகமொன்றிலேயே வாழ்கின்றோம். குறித்த சமூகத்தில் வெவ்வேறு பண்புகளைக்கொண்ட மக்கள் உள்ளனர். ஆகையால் அனைவருடனும் ஒன்றிணைந்து செயற்படும்போதே விட்டுக்கொடுப்புகள் உருவாகும்.
அந்தவகையில் புராணம், மகாபாரதம், மகாவம்சம், பைபில், குர்ஆன் ஆகியவற்றில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளதென  கூறி, அதற்கு ஏற்றவாறு தனிதனியாக செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என்பதை அனைத்து மதத் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் நிலச் சட்டங்கள், திருமணச் சட்டங்கள் போன்ற தனிச் சட்டங்கள் நாட்டில் இருக்க முடியாது. அனைவரும் ஒரே தேசம், கொள்கை என்ற கட்டமைப்பின் கீழேயே செயற்பட வேண்டும். இந்த நாட்டை ஒரே நாடாக கொண்டு வருவதற்கு அதிக இரத்தத்தை இதற்கு முன்னர் சிந்தியுள்ளோம்.
ஆகையால் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒரே சட்டத்திட்டங்களின் கீழ் செயற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்” என பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்