7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வியாழன், 26 செப்டம்பர், 2019

யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட திலீபனின் நினைவு நாள்

தியாகி திலீபனின் 32ஆவது நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு கடந்த 21ஆம் திகதி வவுனியாவிலிருந்து திலீபன் வழியில் வருகிறோம் என்ற தொனிப்பொருளில் ஆரம்பித்த நடைபயணம் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இனஅழிப்பு மற்றும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியின் ஏற்பாட்டில் குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகிய நடைபயணம், தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபியை சென்றடைந்தது.
நினைவுத்தூபியில் மாவீரர்களின் தாயாரால் ஈகை சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர்கள், காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து‌ கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்