வவுனியா புகையிரத நிலையம் முன்பாக புதிதாக புத்தர் சிலை ஒன்றினை முச்சக்கர வண்டி சாரதிகள் இன்று (2019.09. 30) வைப்பு செய்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வவுனியா, புகையிரத நிலையம் முன்பாக சிறிய கட்டடம் ஒன்று அமைத்து அதில் பிள்ளையார்,மாதாவின் சிலை, புத்தர் சிலை ஆகிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளது
குறித்த பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வழிபாட்டுக்காக குறித்த வழிபாட்டு தலத்தை மத நல்லிணக்கம் என்னும் பெயரில் அமைத்துள்ளனர்.
வவுனியாவில் தமிழ் சிங்கள மக்களின் ஒற்றுமைக்காகவும் புகையிரத நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் வழிபாட்டுக்காகவும், தமது வழிபாட்டுக்காகவும் விநாயகர் சிலை, மாதா சிலை, புத்தர் சிலை உள்ளிட்ட சிலைகள் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் இஸ்லாத்திற்கு உருவ வழிபாடு ஏதும் இல்லாததால் உருவச்சிலை ஏதும் வைக்க வில்லை என முச்சக்கர வண்டி தரிப்பிட சாரதிகள் தெரிவித்துள்ளனர்.</வவுனியா புகையிரத முச்சக்கர வண்டி தரிப்பிட சாரதிகளின் இச்செயலை வவுனியா முழுவதும் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

