7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வெள்ளி, 11 அக்டோபர், 2019

திருகோணமலை கடற்படை நிலஅறைக்குள் நடந்த சித்திரவதை

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் உள்ள கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை கூட வளாகத்தில் இளைஞர் யுவதிகள் பலர்
சுட்டுக்கொல்லப்பட்டமைக்கான சான்றுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்கவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
திருகோணமலை கடற்படை முகாமுக்குள் உள்ள கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை கூட வளாகத்தில் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் அழைத்துச்செல்லப்பட்டு சுட்டு படுகொலை செய்யப்பட்டதற்கான சான்று உள்ளதாக சி.ஐ.டி. இதன்போது அறிவித்துள்ளது.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாகநாதன் எனும் மாணவன், குறித்த சித்திரவதை கூடத்தில் இருக்கும்போது தனது தாய்க்கு தொலைபேசியில் தெரிவித்த விடயம் உண்மையென நம்புவதற்கான சான்றுகள் உள்ளதாக சி.ஐ.டி. சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்