7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வியாழன், 27 பிப்ரவரி, 2020

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய மாபெரும் அமைதிப்போராட்டம் ஜெனிவா (09.03.2020)

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய மாபெரும் அமைதிப்போராட்டம் எதிர்வரும் 09.03.2020, அனைத்து மக்களையும் எம்முடன் இணைந்து நம்மினத்தின் விடுதலைக்கு குரல் எழுப்புமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
காலம்: 09.03.2020, மாலை 14:00 மணி முதல், ஜெனிவா முருகதாசன் திடலில்

வணக்கம் உறவுகளுக்கு,
தாயகத்திலை ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பிற்பாடு தமிழினத்துக்கு இருக்ககூடிய நீதிக்கான போராட்ட களம்களாக, சர்வதேச அரசுகளை நோக்கிய போராட்டங்களும், ஐ.நா நோக்கிய போராட்டங்களும் அமையப்பெற்றிருக்கின்றது.
ஆனால் போரின் மௌனிப்பு தமிழ் மக்களின் உணர்வையும், தேசியக்கடமைகளையும், தமிழ்மக்களுக்கான விடுதலையின் தேவையையும் சேர்த்து மௌனித்து விட்டதோ என எண்ணுமளவிற்கு, புலம்பெயர்தேசங்களில் மக்களின் பங்களிப்புகளும், செயற்பாடுகளும் எதிர்வு கூறி நிற்கிறது.
உங்களை போன்றவர்களின் செயற்பாடுகள் தமிழ் தேசிய அரசியலை சர்வதேசத்தின் முன்னால் கொண்டு சென்று தமிழ் மக்களிற்கான சுதந்திரமான விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும். அதற்காக நீங்களும் உழைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
விடுதலையை வேண்டி நிற்கும் தமிழினத்திற்காக ஊடகம் என்பது அற்று இருக்கின்ற சூழ்நிலையில், இருக்கக்கூடிய வளங்களான புலனம் செயலி (வடஸ்அப்), முகப்புத்தகம் (பேஸ்புக்) போன்ற சமூக வலைத்தளங்களை எமக்கான ஊடகம்களாக வரித்து உங்களாலான செயற்பாடுகளை செய்ய வேண்டுகின்றோம்.
சமகால அரசியல் சூழ்நிலையில், நடைபெறும் நீதிக்கான போராட்ங்களில் மக்கள் பெருவாரியாக ஏன் கலந்து கொள்ளவேண்டும் என்ற அவசியங்களை கருத்துருவாக்கம்களை ஒலி, ஒளிப்பதிவுகள், டிக்டாக் போன்ற செயற்பாடுகள் மூலம் செய்யவேண்டுகின்றோம்.
அப்படியான பதிவுகளை தொடர்ந்து நீங்கள் செய்வதனூடாக தொடர்ந்து நடைபெறும் நீதிக்கான போராட்டங்களில் மக்களை அதிகளவில் பங்குபற்ற வைக்கலாம் என நம்புகின்றோம்.
உங்களுடைய பங்களிப்பை நிச்சயம் செய்வீர்கள் என நம்புகின்றோம்.
நன்றி.
சுவிஸ்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

 

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்