திருகோணமலை லிங்கநகர் பகுதியில் உள்ள கலப்பு பிரதேசத்தில் ஆணொருவரின் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
லிங்கநகர் முதலாம் ஒழுங்கையைச் சேர்ந்த குட்டி என்றழைக்கப்படும் காத்தீபன் 34 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் மனைவியோடு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் மது அருந்துவதற்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது கண் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் கலப்பு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவருடைய மரணம் கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் திருகோணமலை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.