7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

செவ்வாய், 3 மார்ச், 2020

கிளிநொச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி தாய்

கிளிநொச்சியில் இளம் வயது கர்ப்பிணி தாயொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்புக்குளம் கல்மடு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி தாயொருவர் நேற்று (02) காலையிலிருந்து கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இருப்பினும் அது சிறுநீர் நோய் தொற்று காரணமாக ஏற்பட்ட வயிற்று வலி என எவரும் அதனைப் பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில் பிற்பகல் திடீரென மயங்கி விழுந்த அவரை, தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அதன்பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் அவர் அதிக இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்