அம்பாறையில் இலங்கை வங்கி ஊழியர்கள், பொதுமுகாமையாளரை பதவி நீக்கியமைக்கு எதிராக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
80 வருட கால வரலாற்றைக் கொண்ட இலங்கை வங்கியின் பொதுமுகாமையாளரை அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றியமையைக் கண்டித்தும், முறையற்ற வகையில் பொதுமுகாமையாளர் ஒருவரை நியமித்தமைக்கு எதிராகவும், இன்று காலை முதல் குறித்த பணிப்புறக்கணிப்பை வங்கி ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக நாடுதழுவிய ரீதியில் இலங்கை வங்கியின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.
ஏற்கனவே இலங்கை வங்கி ஊழியர் சங்கம் குறித்த பணிப்புறக்கணிப்பு தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவித்த போதிலும், வங்கியில் தேவைநிமித்தம் வந்த கல்முனை மருதமுனை சாய்ந்தமருது காரைதீவு பகுதி வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதேவேளை யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி உட்பட நாடளாவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அனைத்து இலங்கை வங்கியின் கிளைகளிலும் பணியாற்றும் ஊழியர்களும் இன்றயதினம் கடமைக்கு சமூகமளிக்கவில்லை.
இதனால் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்திருந்தனர்.