யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கடந்த சில தினங்களின் முன்னர் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்கள், முக்கிய தமிழ்
அரசியல்வாதியொருவரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கைதான ஆறு சந்தேகநபர்களும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்தவாரம் இராணுவப் புலனாய்வு பிரிவினர், பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினர் இணைந்து பருத்தித்துறை வல்லிபுர ஆலயத்திற்கு அருகில் வீடொன்றை சுற்றிவளைத்தனர்.
இந்த சுற்றிவளைப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் இடம்பெற்றதாக கூறப்பட்டிருந்தது.
இதன்போது வீட்டிலிருந்து நால்வர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து சக்தி வாய்ந்த வெடிபொருட்கள், அண்மையில் தயாரிக்கப்பட்ட நவீன தகவல் தொடர்பு உபகரணங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதேவேளை இந்த சுற்றிவளைப்பிற்கு முன்னதாக, ஜேர்மன் கடவுச்சீட்டை கொண்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்தே இந்த வீடு சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் தற்போது குறித்த வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் சில வலையமைப்புக்கள் ஊடாக இந்த குழுவிற்கு நிதியளிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்நிலையில் கைதானவர்கள் சக்திவாய்ந்த வெடிபொருட்களைப் பயன்படுத்துவது குறித்து சிறப்புப் பயிற்சியினைப் பெற்றிருந்ததாகவும் மலேசியா மற்றும் இந்தியாவில் உள்ள முன்னாள் புலிகளின் தலைவர்கள் நிதி மற்றும் பிற உதவிகளை அவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் கைதானவர்களை இயக்கிய வலையமைப்பைக் கண்டறிய வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் உதவியை இலங்கை அதிகாரிகள் நாடியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் அண்மையில் இந்த வலையமைப்பின் வளர்ச்சியைத் தொடர்ந்து நாங்கள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது