7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

ஞாயிறு, 22 மார்ச், 2020

கிளிநொச்சியில் வீசப்பட்டுள்ள விமான பயணிகளின் உணவு கழிவு பெட்டிகள்

விமானத்தில் வழங்கப்படும் உணவுப் பொதிகள் அடைத்துவரும் கழிவு பெட்டிகள் கிளிநொச்சியில் வீதிகளின் இருமருங்கிலும் வீசப்பட்டு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நேற்று இந்தியாவில் இருந்து வருகை தந்த விமான பயணிகள் கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள விமானப்படை தனிமைப்படுத்தும் முகாமுக்கு அழைத்து வரும்போது கழிவு பெட்டிகள் வீசி விடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீபவன் உணவு கழிவு பெட்டிகளை நேரில் வருகை தந்து பார்வையிட்டு அகற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்