.ஏப்பிரல் 10 2002..
தமிழீழ தனியரசு மனதளவில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டதான உணர்வு மனதை
ஆட்கொண்ட நாள்.
இராணுவபலத்தில் இலங்கை அரசை விஞ்சி நின்ற புலிகளின் அரசியல் ஆளுமையும் வெளிப்பட்ட நாள்.
தேசியத்தலைவர் அவர்கள் பலதடவைகள் பலதரப்பட்ட ஊடகவியலாளர்களுடனும், அரசியல்துறை சார்ந்த தனிமனிர்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தாலும் முதல் தடவையாக தென்னிலங்கை, ஆசிய பிராந்திய, சர்வதேச பத்திரிகையாளர்கள் வன்னியில் ஒன்றுகூடிய தினம்.
புலிகளின் அரசியல் நிலைப்பாடுகளும், போராட்டத்தின் மீதான அவர்களின் பற்றுறுதியும் ஆணித்தரமாக ஒவ்வொரு நொடியும் வெளிப்பட்டதினம்.
சர்வதேச சக்திகளை, இராணுவ விற்பன்னர்களை வன்னியினை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்த இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் ஏராளம் கேள்விகள் புலிகளை நோக்கி வீசப்பட்டது.
தமிழீழ கோரிக்கையினை கைவிட்டால் மரணதண்டனை என்னும் உங்கள் நிலைப்பாடு இனியும் தொடருமா என்னும் கேள்விக்கு, அது தொடரும் என கூறியதையும்,
இந்திய உளவுத்துறை மூலம் உங்களை கைது செய்து, தண்டனை வழங்க முற்பட்டால் என்ன செய்வீர்கள் என்னும் கேள்விக்கு தனக்கேயுரிய புன்னகையுடன் நடக்கிற கதையினை கதைக்க சொல்லுங்கோ என கூறியதும் ... ..,
உண்மையிலேயே மனம் பெருமை கொண்ட தருணங்கள் அவை.
தமிழர் வாழ்வியலின் பல பெருமைக்குரிய தருணங்களை எமக்கு தந்தவர்கள் புலிகள்.
முகப்புத்தக நட்பின் (அன்பரசன் நடராஜா) பதிவின் பிரதி