அமெரிக்காவில் கொரோனா வைரஸால் அதியுச்ச உயிரிழப்பு நேற்று
பதிவாகியுள்ளதுடன் ஏனைய நாடுகளைவிட பன்மடங்காக வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் எண்ணிக்கை 7 இலட்சத்தைக் கடத்துள்ளது.
அமெரிக்காவில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 535 பேர் மரணித்துள்ளனர். உலக நாடுகளில் அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ள அமெரிக்காவில், மொத்தமாக 37 ஆயிரத்து 154 பேர் மரணித்துள்ளனர்.
மேலும், புதிதாக 32 ஆயிரத்து 165 பேர் வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு 7 இலட்சத்து 9 ஆயிரத்து 735 ஆக அதிகரித்துள்ளது.
அந்நாட்டில் இதுவரை 35 இலட்சத்து 72 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் 7 இலட்சம் தொற்றாளர்களில் இருந்து 60 ஆயிரத்து 510 பேர் மாத்திரமே இதுவரை குணமடைந்துள்ளனர்.
மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நியூயோர்க் மாநிலத்தில் நேற்று மட்டும் ஆயிரத்து 25 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு மட்டும் மொத்த மரணம் 17 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது. இதனைவிட வைரஸ் தொற்றாளர்கள் 2 இலட்சத்து 33 ஆயிரத்து 951 ஆகப் பதிவாகியுள்ளது.
இதையடுத்து நியூஜெர்ஸி மாகாணத்தில் நேற்று 322 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 3 ஆயிரத்து 840 ஆகப் பதிவாகியுள்ளது.

