7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வியாழன், 2 ஏப்ரல், 2020

கோட்டாபயவின் நிதியத்துக்கு யாழ்ப்பாண தமிழரும் நிதியுதவி

ஜனாதிபதி கோட்டபாயவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கொவிட் 19 சுகாதார சமுக
பாதுகாப்பு நிதியத்துக்கு யாழ்ப்பாண தமிழர் ஒருவரும் நிதியுதவி அளித்துள்ளார்.
தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரன் என்பவரே ஒரு கோடி ரூபா நிதியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தோருக்கு உதவி வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் கொவிட் 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்தை ஆரம்பித்து வைத்திருந்தார்.
இந்த நிதியத்துக்கு பல நிறுவனங்கள் தனிப்பட்டவர்களிடம் இருந்து நிதியுதவிகள் கிடைத்து வருகின்றன.
இந்த நிலையில் யாழ்ப்பாணத் தமிழரான தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனும் இந்த நிதியத்துக்கு மேற்படி தொகையை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

கோட்டாபயவின் நிதியத்துக்கு யாழ்ப்பாண தமிழரும் நிதியுதவி

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்