கிளிநொச்சி வின்சன் வீதி 3ம் கட்டை திருவையாறு பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டையிழந்து
வேலியின் தூண் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சுந்தரம் மகேந்திரம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் தொடர்ந்து விபத்து இடம்பெறுவதனால் வீதி தடுப்பை அமைத்து தருமாறும் மக்கள் கோரிக்கை முன் வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயம்

