7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

தமிழீழ பற்றாளர் போலா அம்மையார் மரணம்: அனைத்து தமிழரும் இரங்கல்

பிரான்ஸ் நாட்டில் நீண்ட காலமாக தமிழீழ ஆதரவாளராக செயல்பட்டு வந்தவர் போலா அம்மையார்.
இவரை தமிழர்கள் சந்திக்காமல் இருந்திருக்கவே மாட்டார்கள். எந்த ஒரு எழுச்சி நடந்தாலும், தமிழீழ தேசிய கொடியோடு அங்கே நின்று. தமிழ் மக்களோடு இணைந்து எமக்காக பல ஆண்டுகளாக குரல் கொடுத்தவர் போலா. அவரையும் விட்டுவைக்கவில்லை இந்த கொரோனா. இவர் கொரோனா தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில். கடந்த 3 தினங்களுக்கு முன்னர் மரணமடைந்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழீழ பற்றாளராக இவர் பல ஆண்டுகள் இருந்துள்ளார்.
பிரான்சில் வாழும் பல நூறு தமிழர்கள் இவரை அறிந்திருப்பார்கள். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு நாமும் பிரார்த்திப்போமாக. அவரை நாட்டுப் பற்றாளராக அறிவிக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. எனவே ஆதரவாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் அவரை கெளவரவிக்க வேண்டும்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்