7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

கிளிநொச்சி மாவட்ட கர்ப்பவதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கர்ப்பவதிகள் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது சிகிச்சை பெற நேரிட்டால் ஊரடங்கை கருத்தில் கொண்டு வீடுகளில் இருந்துவிட வேண்டாம் எனவும் இக்காலத்தில் அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு (1990) அல்லது தங்கள் பிரிவுகளில் உள்ள குடும்ப நல உத்தியோகத்தகர்களுடன் தொடர்பு கொண்டு வைத்தியசாலைக்கு செல்வதற்கான உதவியை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கிளிநொச்சியில் ஊரடங்கு வேளையில் சிறுவர்கள் , பிரசவத்தின் பின்னரான தாய்மார்கள் மற்றும் கர்ப்பவதிகள் எவருக்காவது காய்ச்சல் அல்லது வேறு நோய் நிலை ஏற்பட்டால் உடனடியாகத் தத்தமது பகுதி பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்களை தொடர்புகொண்டு அரச வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து உதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை காரணமாக கொண்டு வைத்தியசாலைகளுக்கு தாமதமாக சென்ற பொதுமக்கள் சிலர் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் வெளியானதை அடுத்தே இந்த அறிவிப்ப விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்