உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கப்படும் நிதியினை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் எடுத்துள்ள முடிவு மிகவும் ஆபத்தானது என உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான, பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சார்பாக செயல்படுவதாகவும், முன்கூட்டியே உலக நாடுகளை அந்த அமைப்பு எச்சரிக்கைவில்லை என்றும் ட்ரம்ப் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் சுகாதார அமைப்புக்கு வழங்கப்படும் நிதியினை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரும் தனது கவலையை வெளியிட்டிருந்ததுடன் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியில் இது போன்று செயல்படுவது பாதகமானது என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில், அமெரிக்க அதிபரின் முடிவினை உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ்ம் கடுமையாக சாடியிருக்கிறார். இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
உலக சுகாதார நெருக்கடியின் போது உலக சுகாதார அமைப்பிற்கு நிதியளிப்பதை நிறுத்துவது ஆபத்தானதாகும்.
அவர்களின் பணி கொரோனா பரவலைக் குறைத்து வருகிறது, அந்த வேலை நிறுத்தப்பட்டால் வேறு எந்த அமைப்பும் அவற்றுக்கு மாற்றாக இருக்க முடியாது, முன்பை விட இப்போது உலகிற்கு உலக சுகாதார அமைப்பு தேவை மிகமிக அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பில் கேட்ஸின் கேட்ஸ் அறக்கட்டளை, உலக சுகாதார அமைப்பின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒன்றாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.