7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 13 ஏப்ரல், 2020

இலங்கையின் உண்மையான நண்பன் “சீனா” - புதிய அத்தியாயம் ஆரம்பம்

மனித குலத்தின் பொது எதிரியான கொரோனா வைரஸை அழிக்க சீனா தன்னாலான அனைத்து
உதவிகளையும் இலங்கைக்கு வழங்கி வருவதாக இலங்கைக்கான பதில் சீனத் தூதர் ஹூ வெய் தெரிவித்துள்ளார்.
மேலும் நம்பிக்கை நிறைந்த இலங்கையில் இரு நாட்டு உறவுகளும் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் பாரம்பரிய சிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டை ஒட்டி இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கும் சீன-இலங்கை உறவின் வளர்ச்சிக்கு ஆதரவு அளித்து வருகின்ற பல்வேறு துறையினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
சீன-இலங்கை மக்களைப் பொறுத்தவரை, 2019 ஆம் ஆண்டு சிறப்பு ஆண்டாகும். சீன-இலங்கை உறவு சீராக வளர்ந்து வருகிறது.
இந்த புத்தாண்டு சிறப்பு என்ற போதிலும் துணிவுடன் முன்னேற வேண்டும் என்ற விருப்பம் மேலும் வலிமையாக உள்ளது.
கொரோனா வைரஸ் மனித குலத்தின் பொது எதிரியாகும். தற்போது, வைரஸ் பரவலைத் தடுக்கும் முக்கிய கட்டத்தில் இலங்கை உள்ளது.
இலங்கையின் உண்மையான நண்பர் என்ற வகையில் சீனா தன்னாலியன்ற அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறது.
இந்த முக்கிய காலத்தில், இலங்கை மக்களுடன் இணைந்து இப்போராட்டத்தில் கூட்டாக வெற்றி பெற சீனா விரும்புகிறது.
இலங்கையில் நம்பிக்கை நிறைந்துள்ளது. சீன-இலங்கை உறவும் புதிய அத்தியாயம் திறந்து வைக்கப்பட்டு வருகிறது.
அனைவருக்கும் மீண்டும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும், சீன-இலங்கை நட்புறவு நீண்டகாலம் நிலவ வாழ்த்துக்களையும் தெரிவிக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்